ADDED : ஆக 18, 2026 08:32 PM
‘நக்சல்’ காங்கிரஸ்! பிரதமர் மோடி, ‘திமாகி’ எனப்படும், அறிவுசார் நக்சல் என்று எதிர்க்கட்சியினரை பார்த்து கூறவில்லை. ஆனால் தங்களை பற்றி கூறியதாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இப்போது அக்கட்சியே, ஒரு நக்சல் கட்சியாக மாறி வருவதாக தோன்றுகிறது. நம் படை வீரர்கள் மடியும் போது, நக்சல்கள் கொண்டாடுகின்றனர். இதை, காங்.,கும் ஆதரிக்கிறதா? கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
பிளவை ஊக்குவிக்கும்! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறக்கும்முன், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். சுதந்திரத்திற்காகப் போராடியது நாங்கள் தான். இதில், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு என்ன? எங்களுக்கு தேசபக்தியை கற்றுக்கொடுக்காதீர். ஒற்றுமைக்குப் பதில், பிளவை ஊக்குவித்து நாட்டிற்கு பா.ஜ., சேதம் விளைவிக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்
ஏகபோக உரிமை! காங்கிரஸ் தலைவர்கள், ‘வந்தே மாதரம்’ பாடலை தொடர்ந்து மதிக்காமல் செயல்படுகின்றனர். இதுபோன்ற தேசிய நலன் சார்ந்த விவகாரங்களில் ஓட்டு வங்கி அரசியலோடு மோதும்போது, தன் கொள்கைகளில் இருந்து அக்கட்சி பின்வாங்குகிறது; எனவே, சுதந்திர போராட்டத்திற்கான ஏகபோக உரிமை கோருவதை காங்., நிறுத்த வேண்டும். ரவி சங்கர் பிரசாத் முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
