தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வஞ்சகமான உத்தி!

வஞ்சகமான உத்தி!

வஞ்சகமான உத்தி!


UPDATED : செப் 05, 2026 11:37 PM

ADDED : செப் 05, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 11:37 PM ADDED : செப் 05, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பா.ஜ., அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை நீக்கி, பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. இதே வஞ்சகமான உத்தியை, தெலுங்கானாவிலும் பா.ஜ., கையாள முயற்சிக்கிறது. காங்கிரசின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் இதை முறியடிக்க வேண்டும். ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்

சனாதனிகள் அல்ல!

மத வழிப்பாட்டுத் தலங்களை இடிப்பவர்கள் ஒருபோதும் சனாதனிகள் ஆக முடியாது. ஓர் உண்மையான ஹிந்து, மற்ற மதத்தின் நம்பிக்கையை அவமதிக்க மாட்டார். மத நல்லிணக்கத்தைப் பேணுவதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உ.பி., சஹாரன்பூர் மசூதி இடிப்பு நடவடிக்கை, மிகவும் அவமானகரமான செயல். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி

மதவெறி அரசியல்!

பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகள் பின்பற்றும் மதவெறி சார்ந்த அரசியல் நம் நாட்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. எங்கள் கட்சித் தலைவர் கார்கேவுக்கு எதிராக அவர்கள் தீண்டாமையை பின்பற்றுகின்றனர். அதை, நியாயப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். இதைப்பற்றி கேள்வி எழுப்பிய ராகுல் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us