தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மக்களின் நம்பிக்கை!

மக்களின் நம்பிக்கை!

மக்களின் நம்பிக்கை!


UPDATED : செப் 14, 2026 07:09 PM

ADDED : செப் 14, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 07:09 PM ADDED : செப் 14, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம், சமூகத்தின் கடைநிலையில் உள்ள சாதாரண குடிமகன் அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்கள் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது. நல்லாட்சி என்பது அத்தகைய மக்களின் நம்பிக்கையைச் சார்ந்தே அமைகிறது. அந்த நம்பிக்கை இல்லை எனில், நல்லாட்சி என்னும் இலக்கை நம்மால் அடைய முடியாது.

யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,

வெளிப்படைத்தன்மை இல்லை!


'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, நம் நாட்டின் எல்லையில் உள்ள லடாக், அருணாச்சல பிரதேசம் தொடர்பான பிரச்னைகளை எழுப்பினாரா? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை, பாக்.,கின் பெயரைக் குறிப்பிடாமல் கண்டித்துள்ளார். ஏன் வெளிப்படைத்தன்மையுடன் பேசவில்லை?

பவன் கெரா ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்



ஆசிர்வாத தீபம்!


பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நீண்ட ஆயுள், நல்வாழ்வுக்காக மக்கள் தங்கள் வீடுகளில் வரும் 17ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் ஆசிர்வாத தீபம் ஏற்றி பிராத்தனை செய்யுங்கள். மக்களுக்கு செய்யும் சேவையே, நாட்டிற்கு செய்யும் சேவை என்ற அவரது கொள்கையுடன், 'வளர்ந்த இந்தியா'வை நோக்கி நம் நாடு முன்னேறி வருகிறது.

நிதின் நபின் தேசிய தலைவர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us