தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நிர்வாக சாதனை!

நிர்வாக சாதனை!

நிர்வாக சாதனை!


UPDATED : செப் 21, 2026 11:08 PM

ADDED : செப் 21, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:08 PM ADDED : செப் 21, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எங்கள் ஆட்சியில் வினாத்தாள் கசிவு, ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி நிகழ்ந்ததாக எந்தப் புகாரும் இல்லை. இதுதான் என் நிர்வாகத்தின் சாதனை. ஆனால் எங்கள் அரசு மீது களங்கம் ஏற்படுத்த, ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியினர் அவதுாறு பரப்புகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை, சட்டசபையில் அரசு சமர்ப்பிக்கும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம் கட்சி

பிரித்தாளும் சூழ்ச்சி!

உ.பி.,யில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர், ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கின்றனர். இதன்மூலம் மாநிலத்தைப் பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும், இக்கொள்கையை மீண்டும் செயல்படுத்தப்படுவதை எந்தச் சூழலிலும் எங்கள் கட்சி அனுமதிக்காது. இங்கு, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. நிதின் நபின் தேசிய தலைவர், பா.ஜ.,

முரண்பாடு!

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், டில்லியில் வாக்காளராக பதிவு செய்திருந்தாலும், அவர் பிறந்த உத்தர பிரதேசம், பணியாற்றிய இடங்களான கேரளா மற்றும் டில்லியின் முந்தைய வாக்காளர் பட்டியலின் பதிவுகளில் அவரது பெயர் இடம்பெறவில்லை. ஆனால், தற்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது முரண்பாடாக உள்ளது. சாகேத் கோகலே மூத்த தலைவர், திரிணமுல் காங்., கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us