தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : செப் 24, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசியல் பிரசாரம்! தலைமை தேர்தல் கமிஷனரை குறிவைத்து விமர்சனங்கள் எழுவது எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரசாரம். பிற தேர்தல் கமிஷனர்களுடன் கலந்தாலோசிக்காமல் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதுதான் உண்மை. அவரை விமர்சிப்பது எதிர்க்கட்சியினர் மற்றும் அறிவுஜீவி நக்சல்களின் விரக்தியையே காட்டுகிறது. ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,

கடுமையான அடி! கட்சி தாவல்களை ஊக்குவித்து ஜனநாயகத்தை காங்கிரஸ் சீர்குலைத்தது. அக்கட்சி எம்.எல்.ஏ., தனம் நாகேந்தர் தகுதி நீக்கத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் முடிவு, காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கு விழுந்த கடுமையான அடி. கே.டி.ராமாராவ் செயல் தலைவர் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி

ஆதாரம் இல்லை! எஸ்.ஐ-.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் எதுவும் தவறாக நடந்ததற்கான ஆதாரம் இல்லை. இது குறித்து நீதிமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. தவறு நேர்ந்ததாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. தேர்தல் கமிஷனர்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேவையின்றி பெரிதாக்குகின்றன. திலீப் கோஷ் பா.ஜ., அமைச்சர் மேற்கு வங்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us