உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 27, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
கொந்தளிப்பும் அமைதியே! நம் நாட்டில் தேர்தல்கள், 100 சதவீதம் முறைகேடாக நடைபெறுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது அதில் நீந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கொந்தளிப்பும் ஒரு வகையான அமைதி என்பதை அது நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
திருப்புமுனை! குஜராத்தின் காண்ட்லாவில் இ – மெத்தனால் ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், பசுமை ஆற்றலை உலகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக நம் நாடு இனி மாறும். கடல்சார் மற்றும் எரிசக்தித் துறைகளில் திருப்புமுனையாக இது இருக்கும். இந்த பசுமை ஆற்றல் மூலம் உலக நாடுகளின் கப்பல்களை நம்மால் இனி இயக்க முடியும். சர்பானந்த சோனேவால் மத்திய அமைச்சர், பா.ஜ.,
சட்ட பாதுகாப்பை நீக்குக! பொறுப்பு ஏற்பதில் இருந்து பாதுகாப்பதற்காகவே தேர்தல் கமிஷனருக்கு சட்டரீதியான பாதுகாப்பை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு வழங்கியுள்ளது. அந்த பாதுகாப்பை நீக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். பிரியங்கா பொதுச் செயலர், காங்.,
