தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்னைக்கு: அதிகரிக்கும் மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்த புதுச்சேரி நகராட்சியின் முன்மாதிரி முயற்சி 

சென்னைக்கு: அதிகரிக்கும் மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்த புதுச்சேரி நகராட்சியின் முன்மாதிரி முயற்சி 

சென்னைக்கு: அதிகரிக்கும் மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்த புதுச்சேரி நகராட்சியின் முன்மாதிரி முயற்சி 


ADDED : செப் 27, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மின்னணு கழிவுகளுக்கு மறுஉயிர் கொடுக்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை சரி செய்து கொண்டனர்.

வீடுகளில் பழுதான மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ் போன்ற மின்சாதனப் பொருட்களைச் சற்றே பழுது ஏற்பட்டாலும் தூக்கி எறிவது கழிவுகளின் அளவை அதிகரிப்பதோடு, நிலம் மற்றும் நிலத்தடி நீரையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இத்தகைய கழிவுகளைக் குறைத்து, பயன்பாட்டில் இல்லாத பொருட்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு புதுச்சேரியில் பழுதுபார்ப்பு மற்றும் மறுபயன்பாட்டு மேளா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பன் கலையரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், 12 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் பழுதாகிக் கிடந்த கேஸ் அடுப்பு, பிரஷர் குக்கர், அயர்ன் பாக்ஸ், மேஜை விசிறி, கிரைண்டர், மிக்ஸி, ரைஸ் குக்கர், இன்டக்ஷன் ஸ்டவ் போன்ற சாதனங்கள் மற்றும் பழுதான குடைகள், காலணிகள் வரை அனைத்தையும் கொண்டு வந்து சரிசெய்து கொண்டனர்.

இம்முகாமில் பொருட்களுக்கான செய்கூலி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. உதிரி பாகங்கள் புதிதாக மாற்ற வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே அதற்குரிய அசல் கட்டணம் பெறப்பட்டது.

முகாமை ஏற்பாடு செய்திருந்த புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித் கூறுகையில், ‘பழைய பொருட்களுக்கு மறுவாழ்வு அளித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தான் இந்த முன்னோடி முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 208 பேர் கலந்து கொண்டு தங்களுடைய பழைய பொருட்களை பழுது பார்த்து எடுத்து சென்றனர்.

நகராட்சியின் முதல் முயற்சியிலேயே புதுச்சேரி மக்கள் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது. எனவே மாதந்தோறும் இது போன்ற ஒரு முகாமை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பொருட்களைத் தூக்கி எறியாமல் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் மின்னணு கழிவுகள் சேர்வது கணிசமாகக் குறைக்கலாம்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us