தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தனித்தே இயங்குவோம்!

தனித்தே இயங்குவோம்!

தனித்தே இயங்குவோம்!


UPDATED : செப் 28, 2026 09:38 PM

ADDED : செப் 28, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 09:38 PM ADDED : செப் 28, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தனித்தே இயங்குவோம்!

நாங்கள், யாருடன் அணி சேர மாட்டோம், தனித்தே இயங்குவோம். நாங்கள், எங்கும் செல்லப் போவது இல்லை; நாங்கள் யாருடனும் இணையப்போவதும் இல்லை; எங்கள் கட்சியை, நாங்கள் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த போகிறோம். எனவே, மற்ற கட்சியினர் எங்களுடன் சேர விருப்பினால் இணையலாம். சரத் பவார் தலைவர், தேசியவாத காங்., சரத்பவார் பிரிவு

மன்னிப்பு கேளுங்கள்!

வாக்காளர் பட்டியலில், சிறப்புத் தீவிர திருத்தப் பணி விவகாரத்தில், பிரதமர் மோடியை, 'தேசத்துரோகி' என விமர்சித்ததற்காகவும், பொய் சொன்னதற்காகவும், தேர்தல் கமிஷனிடம் காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும். அதை செய்தால், 'மோசடி பேர்வழி' என, அவரை குறிப்பிடுவதை நிறுத்துவேன். ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்

நம்பிக்கை சிதைவு!

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மீது மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கிறது. இந்த முறையை, நாங்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். இவற்றின் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதை உடனே நிறுத்திவிட்டு, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us