ADDED : செப் 28, 2026 08:13 PM
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் இன்று (29ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மின்துறையில் மின்நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் இன்று (29ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
புதுச்சேரி– கடலுார் சாலை, கன்னியக்கோவிலில் உள்ள ஏ.டி.ஆர். மஹாலில் நடக்கும் முகாமில், கிருமாம்பாக்கம்–இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் பட்டியல், மின்மானிகளின் குறைபாடு, தெருவிளக்கு மற்றும் மின்சாரம் தொடர்புடைய குறைபாடுகளை எழுத்து வடிவில் தயாரித்து நேரில் கொண்டு வந்து தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
