தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி:ஒன்றிணைய அழைப்பு!

தேசியம் பேட்டி:ஒன்றிணைய அழைப்பு!

தேசியம் பேட்டி:ஒன்றிணைய அழைப்பு!


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒன்றிணைய அழைப்பு!


நாடு முழுதும் நடக்கும் சிறிய போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை. சிறிய மீன்கள் ஒன்று சேரும்போது பெரிய மீன் கூட அஞ்சும். எனவே காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடங்கியுள்ள `சத்யாகிரகம்' என்ற டிஜிட்டல் தளத்தில் மக்கள் அனைவரும் இணைந்து நாடு தழுவிய கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
- பூபேஷ் பாகெல்
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்



செயல்படாத தேர்வாணையம்!


மஹாராஷ்டிராவில், 70 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய அரசு அதிகாரிகளை தேர்வு செய்யும் முதன்மை தேர்வுக்கான இறுதி முடிவுகளை, இதுவரை வெளியிடவில்லை. தேர்வாணையம் தவறானவர்கள் கையில் சிக்கி செயல்படாததால், மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைந்துள்ளது.
- அஜய் மாகன்
மூத்தத் தலைவர், காங்.,



முகமூடி கிழித்தெறியப்படும்!


நாங்கள் பா.ஜ.,வில் இருந்திருந்தால், ஹரிச்சந்திரனைப் போல உண்மையின் அடையாளமாக திகழ்ந்திருப்போம். மாறாக பா.ஜ.,வை எதிர்ப்பதால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை எங்கள் மீது பாய்கிறது. தேர்தல் கமிஷனின் முகமூடி கிழித்தெறியப்பட்டது போல் இந்த அமைப்புகளின் சுயரூபமும் விரைவில் அம்பலமாகும்.
- தேஜஸ்வி யாதவ்
பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us