
திட்டமிட்டு பரப்பிய வதந்தி!
நான் பா.ஜ.,வில் இணையப் போவதாக வெளியான தகவல் வதந்தி. ஊடகங்கள் தான் இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பின. காங்கிரசிலிருந்து விலகப் போவதாக நான் ஒருபோதும் கூறியது இல்லை.
கமல்நாத்
மூத்த தலைவர், காங்கிரஸ்
ஏழைகளுக்கு வீடுகள் தயார்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியவர்களுக்கான தொகையை, மத்திய அரசு ஒதுக்காமல் தாமதம் செய்கிறது. ஏப்., 1க்குள் நிதியை ஒதுக்காவிட்டால், இங்குள்ள ஏழைகளுக்காக மாநில அரசே, 11 லட்சம் வீடுகளை கட்டித் தரும்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
தொகுதிக்காக கையேந்தவில்லை!
தொகுதிகளுக்காக கூட்டணி கட்சிகளிடம் கையேந்தும் நிலையில் நாங்கள் இல்லை. பா.ஜ.,வை தோற்கடிப்பதற்காக, 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டதே தவிர, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதியை குறைப்பதற்கு அல்ல.
ஒமர் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

