
கொடூர கொலையாளிகள்!
இஸ்ரேலிய அரசு காசாவில், 130 குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொடூரமாகக் கொலை செய்திருப்பது, அவர்களுக்கு மனிதநேயம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இஸ்ரேலிய அரசு எவ்வளவு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறதோ அந்த அளவு தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகிறது.
பிரியங்கா
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
சுங்க கட்டணத்தில் சலுகை!
விரைவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கான புதிய சுங்கக் கட்டணக் கொள்கையை அறிவிக்க உள்ளோம். இதில் மக்களுக்கு நியாயமான சலுகை கிடைக்கும். நான்கு வழிச் சாலைகளில் மட்டுமே சுங்கம் வசூலிக்கப்படுகிறது. சந்தையில் இருந்து நிதி திரட்டுவதால் சுங்கக் கட்டணம் தேவையாக உள்ளது.
நிதின் கட்கரி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
1,000 பக்தர்கள் எங்கே?
பிரயாக்ராஜில் நடந்து முடிந்த மஹா கும்பமேளாவுக்கு சென்ற சுமார் 1,000 பக்தர்களை காணவில்லை. பிரதமர் மோடி லோக்சபாவில் அளித்த அறிக்கையில், இவர்களை கண்டுபிடிப்பது பற்றி பேசியிருக்க வேண்டும். அதே போல் மஹா கும்பமேளாவிற்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்ற விபரம் தேவை.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி