ADDED : ஏப் 16, 2026 02:08 AM

அரசு பணிகளிலும் இட ஒதுக்கீடு! லோக்சபா, மாநில சட்டசபைகளில், மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவை விரைவில் அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு இதே போல இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஸ்மிருதி இரானி மூத்த தலைவர், பா.ஜ.,
ராகுலுக்கு தைரியம் இருக்கா? நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ எந்தவொரு நாட்டின் பாஸ்போர்ட்டையும் வைத்திருக்கவில்லை. காங்., - எம்.பி., ராகுல் தான் பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளார். அவர் முட்டாள்தனமாக பேசி வருகிறார். தைரியம் இருந்தால், பாஸ்போர்ட் விபரங்களை அவர் வெளியிட வேண்டும். ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு! மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்கிறோம். எனினும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களை புறக்கணிப்பதை எதிர்க்கிறோம். ஏதோவொரு மறைமுக திட்டத்துடன் இந்த சட்டத்திருத்தத்தை பா.ஜ., கொண்டு வருகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பை தவிர்க்க மத்திய அரசு முயற்சிப்பதும் கண்டனத்துக்குரியது. அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
