UPDATED : ஜூலை 21, 2026 11:13 PM
ADDED : ஜூலை 21, 2026 08:05 PM
டில்லியில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நான் குறை கூற விரும்பவில்லை. அவர்களில் பலர் நல்ல நோக்கத்துடன் கூட பங்கேற்றிருக்கலாம். ஆனால், சில தீயசக்திகள் தங்களின் சுயநலத்துக்காக போராட்டத்தில் ஊடுருவின. இதை ஏற்க முடியாது. தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
பிரதமரே முழு பொறுப்பு! போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பு. அவர், மாணவர்கள், இளைஞர்களுக்கு முற்றிலும் எதிரானவர். அவரது காட்டுமிராண்டித்தனத்தை தற்போது நாடே பார்க்கிறது. இந்த நாட்டில் போராட்டம் நடத்த கூட அனுமதி இல்லையா? கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்.,
ஓரணியில் திரள வேண்டும்! மேற்கு வங்கத்தில், மக்கள் விரோத பா.ஜ., அரசுக்கு எதிராக, தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, கம்யூ., கட்சிகள், காங்., உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இது காலத்தின் கட்டாயம். எனக்கு துரோகம் செய்து, பா.ஜ.,வில் இணைந்த அதிருப்தியாளர்களை இனி கட்சியில் மீண்டும் சேர்க்க மாட்டேன். மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்., கட்சி
