தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/முதலைக்கண்ணீர்!

முதலைக்கண்ணீர்!

முதலைக்கண்ணீர்!


UPDATED : ஜூலை 25, 2026 08:05 PM

ADDED : ஜூலை 25, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2026 08:05 PM ADDED : ஜூலை 25, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள், இளைஞர்கள் நலன் பற்றி பேச காங்., - சமாஜ்வாதி கட்சியினருக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்த போது மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டன. தற்போது அக்கறை இருப்பது போல முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. இந்த மாபியா கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும். யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,

விவாதங்கள் தேவை!

நாங்கள் இளமையாக இருந்த போது, அது கீழ்படிதலின் காலமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. இன்றைய இளம் தலைமுறையினர் அதிக கேள்விகளை கேட்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை. அவர்களை புரிந்து கொள்ள கட்டளைகளை விட அர்த்தமுள்ள விவாதங்கள் தேவை. மோகன் பாகவத் தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,

அடிபணிந்த சர்வாதிகாரி!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, மாணவர்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கேவுக்கு வாழ்த்து. ஒட்டுமொத்த கரப்பான்பூச்சிகள் சேர்ந்து சர்வாதிகாரியை அடிபணிய வைத்து விட்டன. உத்தவ் தாக்கரே தலைவர், உத்தவ் சிவசேனா கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us