ADDED : ஜூலை 25, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வி.வி.பி., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணிமேற்கொள்ள உள்ளதால் நாளை குடிநீர் நிறுத்தப்படுகிறது.
நாளை (27ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வி.வி.பி., நகர் பேட்டையான்சத்திரம், காந்தி நகர், ஞானதியாகு நகர், கஸ்துாரிபாய் நகர், வீமன் நகர், திலாசுபேட்டை, கதிர்காமம், திண்டிவனம் ரோடு ராஜிவ் சிக்னல் முதல் வீமன் நகர் பஸ் நிறுத்தம் வரை, வழுதாவூர் ரோடு, ராஜிவ் சிக்னல் முதல் கதிர்காமம் பஸ் நிறுத்தம் வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
