தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ.1.48 லட்சம் மோசடி

4 பேரிடம் ரூ.1.48 லட்சம் மோசடி

4 பேரிடம் ரூ.1.48 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 25, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1.48 லட்சம் இழந்துள்ளனர். 

மூலக்குளத்தை சேர்ந்தவர் குறைந்த விலையில் டிஜிட்டல் நாணயம் வாங்குவது தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, அதுதொடர்பான விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர் 1,000 டிஜிட்டல் நாணயங்களை அனுப்புவதற்கு முன்பணமாக ரூ. 94 ஆயிரம் செலுத்தும்படி தெரிவித்தார்.

இதைநம்பி பணம் செலுத்திய நிலையில், டிஜிட்டல் நாணயம் எதுவும் அவருக்கு வரவில்லை. அதன்பிறகே சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. 

இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 999, பாகூரைச் சேர்ந்த பெண் 12 ஆயிரம், கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் 38 ஆயிரம் என, 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 999 இழந்துள்ளனர்.

இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us