தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தெலுங்கானாவுக்கு அநீதி!

தெலுங்கானாவுக்கு அநீதி!

தெலுங்கானாவுக்கு அநீதி!


UPDATED : ஆக 24, 2026 08:11 PM

ADDED : ஆக 24, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2026 08:11 PM ADDED : ஆக 24, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு செல்ல பா.ஜ.,வைச் சேர்ந்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதே நோக்கத்துக்காக தான், அமெரிக்கா செல்ல நானும் அனுமதி கேட்டேன். எனக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன்? இது தெலுங்கானாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்

வேலையின்மை அதிகரிப்பு!

'நிடி ஆயோக்' அறிக்கையின்படி, நாட்டில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், இளைஞர்களிடையே ஏமாற்றமும், விரக்தியும் நிலவுகிறது. இதை சமீபத்திய போராட்டங்களில் நாம் கண்கூடாக பார்த்தோம். பெரும் பணக்காரர்களுக்கு ஏற்ற அரசாக மத்திய அரசு உள்ளது. பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

திசை திருப்பும் முயற்சி!

கேரளாவில், காங்., கூட்டணி அரசு பதவியேற்று, 100 நாட்களை கடந்துள்ளது. எனினும் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதிலிருந்து மக்களை திசை திருப்பவே, பாலக்காடு ரயில்வே டிவிஷன் விவகாரம் பற்றி தவறான தகவல்களை காங்., பரப்புகிறது. இத்திட்டத்தால் கேரளாவுக்கு பாதிப்பு இல்லை. ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us