ADDED : ஆக 24, 2026 07:31 PM
: பட்ஜெட்டில் சிறைக் கைதிகளுக்கான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், மனநல மற்றும் உளவியல் ஆலோசனை சேவைகளும் வலுப்படுத்தப்படும். அவர்கள் விடுதலைக்கு பிறகு சமூகத்தில் மறுவாழ்வினை எளிதாக்கும் வகையில் தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கல்வி மற்றும் எழுத்தறிவு திட்டங்கள், நடத்தை ஆலோசனை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன.
சிறை நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில், முழு உடல் ஸ்கேனர்கள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக 4.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த வசதிகளுடன் கூடிய நவீன மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. 2026–27ம் ஆண்டில் சிறைத் துறைக்காக 19.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
