UPDATED : ஆக 26, 2026 08:33 PM
ADDED : ஆக 26, 2026 08:12 PM
பெண் உரிமை விவகாரத்தில் காங்., - எம்.பி., ராகுல் இரட்டை வேடம் போடுகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து, அவரது கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவதுாறு கருத்து தெரிவித்த போது, மவுனமாக இருந்தார். இது போல பல சந்தர்ப்பங்களை கூற முடியும். ஆணாதிக்கத்தை ஒழிப்பதை பற்றி ராகுல் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
பன்சூரி ஸ்வராஜ் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
நன்மை பயக்கும்!
ஜார்க்கண்டில், சுரங்க, கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் குறித்து, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசு தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்பமடை செய்கிறது. இந்த சட்டம், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும். இது, சட்ட விரோத சுரங்க தொழிலை கட்டுப்படுத்தும். ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர், பா.ஜ.,
பேச்சு மூலம் தீர்க்கணும்!
பள்ளிகளில், 'ஹிஜாப்' அணிவது தொடர்பான பிரச்னைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லாமல், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் - அரசு தரப்பினர் பேச்சு நடத்தி உள்ளூர் அளவிலேயே தீர்க்க வேண்டும். இத்தகைய விவகாரங்களில் அரசியல் செய்ய யாருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாது. மத நம்பிக்கைகளை அனைவரும் மதிக்க வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
