UPDATED : ஆக 29, 2026 09:33 PM
ADDED : ஆக 29, 2026 08:42 PM

ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்காமல், வெறும் பட்டத்தை மட்டுமே வழங்கும் கல்வி முழுமையற்றது. அதனால் பயன் எதுவுமில்லை. கல்வியை விட ஒழுக்கமே மிக முக்கியமானது. ஒருவரது சுபாவத்தில் பணிவும், குணத்தில் ஒழுக்கநெறியும் இல்லையென்றால், படித்த மனிதன் கொடூரமான மிருகத்தை விட ஆபத்தானவன். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
மீண்டுமொரு எஸ்.ஐ.ஆர்.?
உத்தர பிரதேசத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நடத்தி, இறுதி வாக்காளர் பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டு விட்டது. ஆனால், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், மீண்டும் எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கலாம். நாம் உஷாராக இருக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
மிக தீவிரமான பிரச்னை!
தெலுங்கானாவில், எஸ்.ஐ.ஆர்., பணியின் போது, 92 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளது, மிக தீவிரமான பிரச்னை. அவரது கவலைகள் உண்மையானவை. இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
