ADDED : ஆக 29, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோரிமேடு அரசு பல் மருத்துவமனை அருகே தன்வந்திரி நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக கையில் பையுடன் வந்த நபர், போலீசாரை கண்டவுடன் தப்பி செல்ல முயன்றார். அவரை விரட்டி பிடித்து போலீசார், சோதனை செய்தபோது, 90 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், திலாஸ்பேட்டை, வீமன் நகரை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் புனித், 18, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
