பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் சமையல் போட்டி
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் சமையல் போட்டி
ADDED : ஆக 29, 2026 08:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் ‘நல்ல உணவு, சிறந்த எதிர்காலம்’ தலைப்பில் ஆரோக்கிய சமையல் போட்டி நடந்தது.
போட்டியில் பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இணைந்து சத்தான உணவுகளைத் தயார் செய்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினர்.
இதில், பத்மஸ்ரீ டாக்டர் நளினி பார்த்தசாரதி, டாக்டர் வித்யா, நீரிழிவு டாக்டர் மற்றும் உணவியல் நிபுணர் சந்தியாவதினி ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொருட்களை பார்வையிட்டு, சிறந்த உணவுகளை தேர்வு செய்தனர்.
பள்ளியின் தாளாளர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கி, குழந்தைகளின் திறன் மேம்பாட்டுக்காக பல தெரபிகளை கையாள்வதோடு, அன்றாட உணவையும் கவனியுங்கள் என்றார். ஆரோக்கிய குடல்- ஆரோக்கிய மூளை- ஆரோக்கிய உணவு - ஆரோக்கிய குழந்தை தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
இதில், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
