தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் 

இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் 

இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் 


ADDED : ஆக 29, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இயற்கை உரம் தயாரிப்பு குறித்த செயல் விளக்க முகாம் திருக்கனுாரில் நடந்தது. 

மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின்படி நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, இயற்கை உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து, ஆத்மா திட்டத்தின் மூலம் இயற்கை உரம் தயாரிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர் தங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். 

இதில், திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us