UPDATED : செப் 01, 2026 10:06 PM
ADDED : செப் 01, 2026 07:51 PM

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார். பொய் சொல்லும் அவரது திறனை தவிர, வேறு எதுவும் மாறவில்லை. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை, சில்லரை பணவீக்கம், விலைவாசி உயர்ந்துள்ளது. இது பற்றி மோடி என்ன சொல்லப் போகிறார்?
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
மன்னிப்பு கேளுங்க!
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளதார வளர்ச்சி, 7.8 சதவீதமாக உள்ளது. நம் பொருளாதாரம் இறந்து விட்டதாக கூறிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இதற்கு என்ன சொல்லப் போகிறார்? பொய் சொன்னதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரவிசங்கர் பிரசாத் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
பா.ஜ.,வின் கைப்பாவை!
பீஹாரைச் சேர்ந்த சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர். இட ஒதுக்கீட்டை அழிக்கத் துடிக்கும் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். இந்த இருவரும் தனித் தொகுதிகளை கைவிட்டு, பொது தொகுதிகளில் நின்று வெற்றி பெற தயாரா?
தேஸ்ஜவி யாதவ் செயல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி
