ADDED : செப் 01, 2026 07:51 PM

புதுச்சேரி: புதுச்சேரி மீனவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங்கிடம் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அளித்துள்ள மனு:
புதுச்சேரியில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். புதுச்சேரி அரசு மீனவர்களுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் அவர்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. மீனவர்கள், தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர். புதுச்சேரியில் தற்போது மீனவர்களுக்கு இரண்டு சதவீத உள் ஒதுக்கீடு வழங்குகிறது.
அது மீனவ சமுதயா மக்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
