தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உர மானியத்திற்கான தகுதியுள்ள விவசாயிகளின் பெயர் பட்டியல்

உர மானியத்திற்கான தகுதியுள்ள விவசாயிகளின் பெயர் பட்டியல்

உர மானியத்திற்கான தகுதியுள்ள விவசாயிகளின் பெயர் பட்டியல்


ADDED : செப் 01, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்புழு உரத் தொட்டி, உரப்படுகை மானியத்திற்கான தகுதியுள்ள விவசாயிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி வேளாண் துறை இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் தோட்டக்கலை அலுவலகம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் இணைந்து தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி பிராந்திய தோட்டக்கலை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரத் தொட்டி மற்றும் மண்புழு உரப்படுகை அமைப்பதற்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மானிய விலையில் இவற்றை அமைப்பதற்கு விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கைக்காக புதுச்சேரியில் உள்ள அந்தந்த பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி வரை இந்த பட்டியல் விவசாயிகளின் பார்வைக்கும் இருக்கும். 

மேலும், இப்பட்டியல் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் https://agri.py.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனைகள் இருந்தால், விவசாயிகள் 10ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் தோட்டக்கலை அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us