வளர்ச்சியின் பெயரில் அடையாளம்; துணை ஜனாதிபதி சிபிஆர் பெருமிதம்
வளர்ச்சியின் பெயரில் அடையாளம்; துணை ஜனாதிபதி சிபிஆர் பெருமிதம்
UPDATED : செப் 03, 2026 10:45 AM
ADDED : செப் 02, 2026 08:02 PM
புதுடில்லி: சத்தீஸ்கர் தற்போது, வளர்ச்சியின் பெயரில் அடையாளம் காணப்படுகிறது என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிபி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சத்தீஸ்கரில் பல ஆண்டு கால நக்சல் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையே காரணம்.
வலுவான தலைமை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஓர் உதாரணம். சத்தீஸ்கர் தற்போது, வளர்ச்சியின் பெயரில் அடையாளம் காணப்படுகிறது. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
உலக வரைபடத்தில் இருந்தே..!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் எடுத்த குழு புகைப்படத்தில் இருந்து வேண்டுமானால், பிரதமர் மோடியின் படத்தை பாக்., நீக்கியிருக்கலாம்.
ஆனால், பிரதமர் மோடி நினைத்தால் உலக வரைபடத்தில் இருந்தே பாகிஸ்தானை நீக்கி விடுவார். இது போன்ற சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டுகளை பாக்., நிறுத்த வேண்டும். ஏக்நாத் ஷிண்டே மஹா., துணை முதல்வர், சிவசேனா கட்சி
தடுத்த நிறுத்தணும்!
தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, நாடு முழுதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். தேர்தல் கமிஷனின் இந்த முறைகேட்டை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும். கபில் சிபல் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,
