புல்வெளி கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் திறந்து வைப்பு
புல்வெளி கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் திறந்து வைப்பு
UPDATED : செப் 02, 2026 07:48 PM
ADDED : செப் 02, 2026 07:40 PM
காரைக்கால்: காரைக்காலில் தனியார் புல்வெளி கிரிக்கெட் மைதானத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
காரைக்கால், வரிச்சிக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் புல்வெளி கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நேற்று நடந்தது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மைதானத்தை திறந்து வைத்து, கிரிக்கெட் விளையாடினார். அவருக்கு வேளாண்துறை அமைச்சர் ராஜசேகரன் பந்து வீசினார்.
இரு அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடியதை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'காரைக்கால் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக புதுச்சேரி அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கோடைகால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் விக்னேஸ்வரன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
