UPDATED : செப் 19, 2026 09:20 PM
ADDED : செப் 19, 2026 08:23 PM
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய திரிணமுல் காங்., அரசு, மக்களின் குரல்களை நசுக்கியது. மாநிலத்தை வங்கதேசமாக மாற்ற அக்கட்சி முயற்சித்தது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வென்றதால், அம்மாநில மக்கள் தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். முதல்வர் சுவேந்து சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
விரைவில் முடிவு!
அமலாக்கத் துறை கோரிக்கையின்படி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக, அட்டர்ஜி ஜெனரல் சட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். ரமேஷ் சென்னிதலா கேரள உள்துறை அமைச்சர், காங்கிரஸ்
பா.ஜ., வெற்றி பெறாது!
உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறாது. இதனால், முடிந்தவரை கொள்ளை அடிப்பதில் பா.ஜ.,வினர் தீவிரமாக உள்ளனர். பா.ஜ., வெற்றிக்காக, தேர்தல் கமிஷன் மீண்டுமொருமுறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
