ADDED : செப் 19, 2026 08:23 PM
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு, கோபால் செட்டியார் வீதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் வெங்கடேசன், 30; கூலி தொழிலாளி. தாய், தந்தை இருவரும் இறந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று மதியம் அவரது சித்தப்பா துளசிங்கம் புரட்டாசியை முன்னிட்டு சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு, வெங்கடேசனை சாப்பிடுவதற்கு அழைக்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்து, வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே வெங்கடேசன் அறையில் உள்ள மின் விசிறியில் இறந்த நிலையில் துாக்கில் தொங்கினார்.
தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
துளசிங்கம் புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
