தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் ‘லிப்ட்’ கடை தெரியுமா? படி ஏறாமலே பொருட்கள் டெலிவரி...

புதுச்சேரியில் ‘லிப்ட்’ கடை தெரியுமா? படி ஏறாமலே பொருட்கள் டெலிவரி...

புதுச்சேரியில் ‘லிப்ட்’ கடை தெரியுமா? படி ஏறாமலே பொருட்கள் டெலிவரி...


ADDED : செப் 19, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரினாலே பிரெஞ்சு காலனி, அமைதியான கடற்கரைனு நெனச்சீங்களா? அட போங்கப்பா... நம்ம ஊரு மக்களோட கிரியேட்டிவிட்டிக்கு முன்னாடி அதெல்லாம் ஜூஜூபி.. அதுவும் லாம்பரட் சரவணன் நகர் பக்கம் போனீங்கன்னா, அமேசான், பிளிங்கிட் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு அல்டிமேட் டெக்னாலஜி கடை இயங்கிக்கிட்டு இருக்கு.

அடுக்குமாடி குடியிருப்பு... அதோட முதல் மாடியில அமைஞ்சிருக்கு அந்த விநோத சூப்பர் மார்க்கெட். வழக்கமா கடைக்கு போனா மாடிப்படி ஏறி, மூச்சு வாங்கி, வேர்த்து விறுவிறுத்துவிடும். ஆனால், இங்க அந்த கவலையே இல்லீங்க..

தரைதளத்துல நின்னுகிட்டு, அங்க தொங்குற கயிற்றை செல்லமா ஒரு இழு இழுத்தா போதும்... மேல கடையில் இருக்கும் மணி டிங் டாங்னு சத்தமா ஒலிக்கும். உடனே மேல இருந்து கடைக்காரர் தலைகாட்டி, ‘‘என்னப்பா வேணும்?’’னு ஒரு பாசமான பார்வைய வீசுகிறார்.

நாம் கேக்குற லிஸ்ட்டை சொன்னதும், மேல இருக்குற கடைக்காரர் சடசடவென பொருட்களை எடுத்து ஒரு பக்கெட்டில் வச்சு, திரில்லர் படத்துல வர்ற ஹீரோ மாதிரி கயிறு மூலமா அந்த பக்கெட்டை பத்தரமா கீழே இறக்குறாரு.

நாமளும் தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு, அதுக்கான காசை அதே பக்கெட்ல போட்டு ஜிங் சாக்னு மேலே அனுப்பி வைக்க வேண்டியதுதான்.. ஜிபே தோற்பதும், இந்த கயிறு பே ஜெயிப்பதும் இங்க தான் சாத்தியம்..

ஸ்கேன் பண்ணத் தேவையில்லை, நெட்வொர்க் பிரச்னை இல்லை, மாடிப்படி ஏறி மூச்சு வாங்கத் தேவையில்லை. டோர் டெலிவரி கேள்விப்பட்டிருக்கோம், இது என்னப்பா புளோர் டெலிவரினு வழியில போறவங்க எல்லாம் ஆச்சரியத்துல தலைசுத்தி பார்க்குறாங்க.

லாம்பரட் சரவணன் நகர் பக்கம் போனீங்கன்னா, கண்டிப்பா இந்த ‘பக்கெட்’ கடையில ஒரு டிங்-டாங் பெல்லை தட்டிட்டு வாங்க மக்களே....

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us