தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு ஞானசம்பந்தன் ‘பாடம்’

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு ஞானசம்பந்தன் ‘பாடம்’

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு ஞானசம்பந்தன் ‘பாடம்’


ADDED : செப் 19, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை கருத்தரங்கத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசியதாவது:

நம்முடைய ஆசிரியர் பணி என்பது  விருதுக்காக இல்லை. விருது கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, நாம் ஓடுகிற ஓட்டத்தை ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

விருது கூட வந்து விட்டு போகும். விருது பொருத்தவரை ஒரு அங்கீகாரம். ஆனால் அத்துடன் முடிந்து விடுவதில்லை. உதாரணமாக பழனிக்கு பாதயாத்திரை போகிறோம்.

போகும் வழியில புளியோதரை கொடுக்கின்றனர். நாம் அதை வாங்கி சாப்பிட்டு, வீட்டுக்கு வந்து விடுவோமா? புளியோதரை, அதுக்கு மேல நடந்து போக வேண்டும் என்பதற்காக, கொடுக்கின்றனர். நம் வேலை முருகனை பார்ப்பது. புளியோதரை சாப்பிடுவது மாதிரி தான் விருது.

 விருது என்பது, அதிகம் உழைப்பதற்காக தரப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, இதுவரைக்கும் வாங்குவதற்காகவும், இனிமேல் வாங்கியதை பாதுகாப்பதற்காகவும் நாம் வாழ்க்கையில பயணப்பட

வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். தெய்வம் கடைசியில் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.

தெய்வத்தை எல்லாவற்றுடன் சேர்க்கலாம். மாதாவும் தெய்வம் தான்.. பிதாவும் தெய்வம், குருவும் தெய்வம் தான்.. 

திருவள்ளுவர் சொல்லும், ‘கற்பவை’ என்னும் சொற்றொடர் தெரிந்து கொள்ள வேண்டியதை மட்டும் குறிக்கவில்லை.

சில தெரியாமலும் இருக்கும். தேவையில்லாததும் கூட இருக்கும். அதை விட்டு விட வேண்டும். எது தேவையோ அதை படிக்க வேண்டும். அதை படித்தாலே போதும். தேவையில்லாமல் ஆயிரம் இருந்தாலும் அதை படித்து கொண்டிருக்கக்கூடாது.

 அதுபோல வாழ்க்கையில நமக்கான எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அதை எடுத்து கொண்டு பயணத்தை தொடர வேண்டும்.

பள்ளிக்கூடத்துல எத்தனையோ பொறுப்புகளை ஆசிரியர்கள் பார்த்து வருகின்றனர். முதலில், பெரிய அங்கீகாரங்கள் எல்லாம் நமக்கு கிடைக்காது.

நம்முடன் இருப்பவர்கள், பாராட்டுவார்களா என தெரியாது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

யார் நம்மை அங்கீகரிக்க வேண்டும். அதை இவர்கள் செய்ய வேண்டும், அவர்கள் செய்ய வேண்டும் என, சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் சின்ன கஷ்டங்கள் நமக்கு வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆயிரம் உபாதைகள் இருந்தாலும், அவர்களின் பிள்ளைகளுக்கே உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட, ஆசிரியர்கள் அன்றைக்கு விடுப்பு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அதே வகுப்பில், ஒரு

பிள்ளைக்கு சின்ன தலைவலி இருந்தால் கூட அந்த பிள்ளையை துாக்கி கொண்ட மருத்துவமனைக்கு செல்வார்கள்.

அது தான் ஆசிரியரின் உன்னத பணி.

அந்த பணியில் நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். நம்மிடம் அபார ஆற்றல் இருக்கிறது.

அது நமக்கு தெரியாது. அது வெளிப்படும் நேரம் ஒன்று இருக்கிறது. அதுபோல மாணவர்கள் திறமை வெளிப்படும். 

நமக்கு சின்ன சின்ன கஷ்டங்கள், மனவருத்தங்கள், உடல் பாதைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம் வராமல் இருக்காது. அவற்றையெல்லாம் சமாளிப்பது தான் வாழ்க்கை. 

 ஆசிரியர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.  மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்ள, டென்ஷன் இல்லாமல் இருக்க, யோகா வகுப்பிற்கு போகலாம். அங்கேயும் டென்ஷனாக போகக்கூடாது.  டென்ஷனுடன் யோகா செய்ய கூடாது.

 சிக்னல் மாறுவதற்குள் சில பேர் செத்து பிழைத்திருப்பார்கள். அவ்வளவு டென்ஷன் இருக்கும். அப்படி விதிமுறைகளை மீறி போய் நாம் என்ன செய்ய போகிறோம். ஒண்ணும் பண்ண முடியாது. நிதானமாக இருக்க வேண்டும்.

அதனால் சில நேரங்கள், கஷ்டமாக இருந்தாலும் கூட, அதை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுக்காக நீங்க உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். எப்போதும் புதுமையாக வைத்துக்கொள்ளுவது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us