தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக ஓசோன் தின விழா 

உலக ஓசோன் தின விழா 

உலக ஓசோன் தின விழா 


ADDED : செப் 19, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், உலக ஓசோன் தின விழா நடந்தது.

பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். 

சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், சன் பவுடேஷன் இயக்குனர் பால கங்காதரன் பங்கேற்று, உலக ஓசோகன் தினம் குறித்து பேசினர்.

விழாவையொட்டி மாணவர்கள் இடையே நடந்த ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, காடுகளின் அழிவால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நடனம் நடந்தது. பின், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் ஸ்ரீராம் செய்திருந்தார். பள்ளி மாணவர்கள் வினிஷா பாலாஜி, தியா ஜெயஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us