ADDED : செப் 19, 2026 07:13 PM
புதுச்சேரி: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கி பொருமாளை தரிசித்தனர்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா, கோவிந்த என முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதோ போன்று, முத்தியால்பேட்டையில் உள்ள தென்கலை சீனிவாசா பெருமாள் சுவாமி சூரிய பிறபையில் அருள்பாலித்தார்.
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில், கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள சக்ரத்தாழ்வார் பெருமாள் கோவில் உட்பட புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
