ADDED : செப் 19, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணி;54; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் தானாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரீக் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, பூரணாங்குப்பத்தை சேர்ந்த சபரிநாதன்,27; விஷ்வா,26, ஆகியோர் சுப்ரமணியிடம் சென்று உன் மகன் எங்கே என கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் மறைந்து வைத்திருந்த கத்தியால் சுப்ரமணியத்தை குத்தினர். படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சபரிநாதனை கைது செய்தனர். விஷ்வாவை தேடி வருகின்றனர்.
