ADDED : செப் 25, 2026 08:20 PM
ஓட்டு வங்கிக்காக அல்ல! மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி பெருமளவு குறைந்துள்ளது. இன்று, கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மிக சிறப்பாக உள்ளன. வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக இதை செய்யவில்லை. அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். நரேந்திர மோடி பிரதமர்
வலுவான வாதம்! தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழும் போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன் தரப்பு வாதத்தை வலுவாக முன்வைக்க வேண்டும். இது, எதிர்க்கட்சிகளை திருப்திப்படுத்த அல்ல; வாக்காளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் மீது முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ஆகும். சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி கட்சி
என்ன தொடர்பு? ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டைரியில், காங்கிரசைச் சேர்ந்த கேரள முதல்வர் சதீசன் பெயரும் உள்ளது. அந்நிறுவனத்திற்கும், அவருக்கும் என்ன தொடர்பு? அந்நிறுவனத்திடம் இருந்து முதல்வர் சதீசன் பணம் வாங்கினாரா? இது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். ராஜிவ் சந்திரசேகர் பா.ஜ., தலைவர், கேரளா
