ADDED : செப் 25, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை டி.வி., நகரை சேர்ந்தவர் இளவழகன், 40; ஆட்டோ டிரைவர். இவருக்கும் மடுவுப்பேட்டையை சேர்ந்த சத்யா, சாரத்தை சேர்ந்த சஞ்சய் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இளவழகன் வைத்திக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சத்யா, சஞ்சய் ஆகியோர் இளவழகனை தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இளவழகன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சத்யா உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.
