ADDED : செப் 28, 2025 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுக்மா : சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத தொழிற்சாலையை, போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., படையினர் நேற்று அழித்தனர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம், கோய்மெண்டா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில், நக்சல்களின் ஆயுத தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுக்மா மாவட்ட போலீஸ் படை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, கோப்ரா சிறப்பு படை தேடுதல் வேட்டை நடத்தி, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டறிந்தன.
ஆயுத தளவாடங்களை கைவிட்டுவிட்டு நக்சல்கள் தப்பி ஓடினர். அங்கிருந்து, 94 வெடிகுண்டுகள், அதை ஏவ பயன்படும் கருவிகள், துப்பாக்கி தயாரிக்க பயன் படும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.