சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; 7 நாட்களில் 9 பேரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை!
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; 7 நாட்களில் 9 பேரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை!
ADDED : ஜூன் 11, 2025 09:20 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 7 நாட்களில் நக்சலைட்டுகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோண்டா- எரபோரா சாலையில் டோண்ட்ரா அருகே நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சுக்மா மாவட்டத்தின் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் உயிரிழந்தார். இதற்கிடையே சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.
அப்பகுதியில் இன்று (ஜூன் 11) பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
7 நாட்களில் நக்சலைட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை!
ஜூன் 5ம் தேதி: ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் சுதாகர்.
ஜூன் 6ம் தேதி: ரூ.45 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு மூத்த தலைவன் பாஸ்கர்.
ஜூன் 7ம் தேதி; நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக்கொலை.
இன்று ( ஜூன் 11ம் தேதி) நக்சலைட்டுகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை.