போலீஸ் 'இன்பார்மர்கள்' என நினைத்து 2 ஆசிரியர்களை கொன்ற நக்சல்கள்
போலீஸ் 'இன்பார்மர்கள்' என நினைத்து 2 ஆசிரியர்களை கொன்ற நக்சல்கள்
ADDED : ஜூலை 16, 2025 12:28 PM
பிஜாப்பூர்: சத்தீஸ்கரில், போலீஸ் 'இன்பார்மர்கள்' என நினைத்து இரண்டு ஆசிரியர்களை நக்சல்கள் கொன்றனர்.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையை மத்திய அரசும், மாநில காவல்துறையும் தீவிரப்படுத்தி யுள்ளது. இதன் காரணமாக பல முக்கிய நக்சல் தலைவர்கள், கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான நக்சல்கள் போலீசில் சரணடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தங்கள் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து சிக்க வைப்பதாக அப்பாவி பொதுமக்களை, நக்சல்கள் அவ்வப்போது கொல்கின்றனர். அதன்படி, பிஜாப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் இருவர், நக்சல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
கோடபட்கு கிராமப் பள்ளியில் பணியாற்றிய வினோத் மேட், 28, மற்றும் டெக்கமேட்டா கிராமப் பள்ளி ஆசிரியர் ரேஷ் மெட்டா, 29, ஆகியோரை போலீஸ் 'இன்பார்மர்கள்' என நினைத்து கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துடன், இந்த ஆண்டு இதுவரை ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் நக்சல்களால் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.