புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை
புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை
UPDATED : அக் 09, 2025 03:45 PM
ADDED : அக் 09, 2025 09:43 AM

சென்னை: சென்னையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.11,425க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், நம் நாட்டில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 07), ஆபரண தங்கம் கிராம் 11,200 ரூபாய்க்கும், சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 167 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 08) காலை, தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று மதியம், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 11,385 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 91,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 170 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
இன்று மதியம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.91,400 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,425 ஆகவும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.171க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும்