அடையாளத்தை மறைத்து, பெயரை மாற்றி வாழ்க்கை: ம.பி.,யில் வங்கதேசத்தவர் கைது
அடையாளத்தை மறைத்து, பெயரை மாற்றி வாழ்க்கை: ம.பி.,யில் வங்கதேசத்தவர் கைது
UPDATED : ஜூலை 19, 2025 10:16 PM
ADDED : ஜூலை 19, 2025 10:12 PM

போபால்: வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் கலாம் எனபவர் தனது பெயரை நேஹா என மாற்றி, திருநங்கையாக ம.பி., மாநிலம் போபாலில் வசித்து வந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் 10 வயதாக இருக்கும் போது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். மும்பையில் இரண்டு தசாப்தங்கள் வாழ்ந்து வந்த இவர், கடந்த 8 ஆண்டுகளாக ம.பி.,யின் புத்வாரா பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கு தன்னை திருநங்கையாக தன்னை காட்டிக் கொண்ட இவர், அங்குள்ள ஹிஜாரா சமூகத்தில் உறுப்பினராக இணைத்து கொண்டு செயல்பட்டு உள்ளார். மேலும் போலி ஆவணங்கள் மூலம், ரேசன் கார்டு, ஆதார் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் அதன் மூலம் பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். மேலும் அப்துல் கலாம் என்ற தனது பெயரை நேஹா என மாற்றிக்கொண்டு அந்த பகுதியில் பல வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் உண்மையில் பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா அல்லது திருநங்கை போல் வேடமிட்டு நடித்தாரா என்பது குறித்து கண்டறிய அவரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் , இவருக்கு போலி ஆவணம் பெற உதவி செய்த அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்த வருகின்றனர். மேலும், இது போல் இன்னும் எத்தனை பேர் தங்களது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகின்றனர் என்பதை கண்டறிய அப்துலின் மொபைல் போனை போலீசார் ஆய்க்கு அனுப்பி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.