sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 நேபாள தேர்தல் எதிரொலி : எல்லை மூடல்

/

 நேபாள தேர்தல் எதிரொலி : எல்லை மூடல்

 நேபாள தேர்தல் எதிரொலி : எல்லை மூடல்

 நேபாள தேர்தல் எதிரொலி : எல்லை மூடல்


ADDED : மார் 02, 2026 01:24 AM

Google News

ADDED : மார் 02, 2026 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: நேபாளத்தில் வரும் 5ல் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எல்லைகளை மூட உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், வரும் 5ல் பொதுத்தேர்தல் நடக்கிறது. அந்நாட்டு எல்லையை ஒட்டி உத்தரகண்ட், பீஹார், உத்தர பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், எல்லையோர மாவட்டங்களை இன்று முதல், 5ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, நேபாள எல்லையில் உள்ள பிதோராகர், சம்பாவத் மாவட்ட எல்லைகளை மூட உத்தரகண்ட் பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், 'மத்திய அரசின் உத்தரவுப்படி, நேபாள தேர்தல் முடியும் வரை, பிதோராகர், சம்பாவத் மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us