பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
ADDED : நவ 23, 2026 07:15 AM

- நமது டில்லி நிருபர் -
நேபாள பிரதமராக மார்ச் மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட பாலேந்திர ஷா, இரு நாள் அரசு முறை பயணமாக டில்லிக்கு வந்தார். அவரை மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாலேந்திர ஷா சந்தித்து பேசினார்.
நேபாள பிரதமரை சந்தித்தது ஒரு பாக்கியம்; நேபாளத்துடனான தனது நெருங்கிய உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் இன்று (நவம்பர் 23) நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க உள்ளார்.
வர்த்தகம், வணிகம், தொழில் நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
பொருளாதாரம், முதலீடு, போக்குவரத்து, எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் முக்கியமான தொலைநோக்கு திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. பிரதமர் மோடியுடனான நேபாள பிரதமர் சந்திப்புக்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.
