ADDED : அக் 19, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தென்மேற்கு டில்லி மோகன் கார்டனை சேர்ந்தவர் சுனில், 29. டில்லி பகவதி கார்டனி வசித்த,ம் நேபாள நாட்டைச் சேர்ந்த தேஜ்ராஜ் ஜோஷி, 27, என்பவருடன் கடந்த 4ம் தேதி நள்ளிரவு மது அருந்தினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் ஆத்திரம் அடைந்த ஜோஷி, கத்தியால் சுனிலை சரமாரியாக குத்தி விட்டு தப்பினார்.
சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தேடப்பட்ட ஜோஷியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.