இன்றிரவு வானில் அதிசயம்; நீலப்புள்ளியாக நெப்டியூன் தெரியும்; பைனாகுலர் உடன் ரெடியா இருங்க!
இன்றிரவு வானில் அதிசயம்; நீலப்புள்ளியாக நெப்டியூன் தெரியும்; பைனாகுலர் உடன் ரெடியா இருங்க!
ADDED : செப் 21, 2024 12:14 PM

புதுடில்லி: சூரியக் குடும்பத்தின் மிக தொலையில், உள்ள நெப்டியூன் கோளை இன்று (செப்.,21) இரவு இந்தியர்கள் பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைவது போல, கிழக்கில் உதயமாகும்.
சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகின்றன. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என மொத்தம் 8 கோள்கள் உள்ளன. கோள்களின் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றை ஒன்று, சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும். அந்த வகையில், சூரியக் குடும்பத்தின் மிக தொலையில், உள்ள நெப்டியூன் கோளை இன்று (செப்.,21) இரவு இந்தியர்கள் பார்க்கலாம். அதாவது, சூரியனுக்கும், நெப்டியூனுக்கும் நடுவில் இன்று பூமி வருகிறது.
டெலஸ்கோப் அவசியம்!
சூரியன் மேற்கில் மறைவது போல, இந்த கோள் கிழக்கில் உதயமாகும். அப்போது அது மிகத் தெளிவாகத் தெரியும். இருப்பினும், இன்று இரவு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து டெலஸ்கோப் மூலம் பார்க்கலாம். பல்வேறு இடங்களில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக புது டில்லியில் உள்ளவர்கள் இன்று இரவு தெளிவாக பார்க்க முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மங்கலாக தெரியும்
வானில் நீல நிறத்தில் ஒரு சிறு புள்ளி போல நெப்டியூன் பிரகாசிக்கும். அதன் வளி மண்டலத்தில் இருக்கும் மீத்தேன் வாயு காரணமாக, இப்படியொரு நிறம் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இருண்ட வானத்தில் பளீர் வண்ணத்தில் தெரியும். பார்ப்பதற்கு டெலஸ்கோப், பைனாகுலர் அவசியம் என்கின்றனர் விண்வெளி ஆராய்சியாளர்கள்.