ADDED : ஜன 14, 2025 01:40 AM
புதுடில்லி: பல்கலை மற்றும் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிக்கான யு.ஜி.சி., நெட் தேர்வு, ஜன., 15ம் தேதி நடத்தப்படும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
தமிழகத்தில் அன்று பொங்கல், மாட்டு பொங்கல் உள்ளிட்ட பண்டிகை கொண்டாடப்படுவதால் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, நாளை நடக்கவிருந்த நெட் தேர்வை தள்ளிவைப்பதாக என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என்.டி.ஏ., வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மகரசங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் ஜன., 15ல் நாடு முழுதும் கொண்டாடப்படுவதையொட்டி அன்று நடைபெற இருந்த நெட் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
'இந்த தேர்வுகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜன., 16ல் நடைபெற உள்ள தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

