ஜூன் 1ம் தேதி வருது டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்
ஜூன் 1ம் தேதி வருது டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்
ADDED : மே 22, 2024 12:21 PM

புதுடில்லி: லைசென்ஸ் வாங்க இனி ஆர்.டி.ஓ., ஆபீஸ் போக வேண்டியது இல்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை ஓட்டத்தை, தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜூன் 1ம் தேதியில் இருந்து இந்த முறை செயல்பாட்டுக்கு வரும். அப்போது இந்த முறையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
கற்றல் உரிமம் (LLR) ரூ.200, கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal) ரூ.200, சர்வதேச உரிமம் ரூ.1000, நிரந்தர உரிமம் ரூ.200 லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.
டிரைவிங் ஸ்கூலுக்கு என்ன தகுதி?
தனியார் பயிற்சி மையங்கள் ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்க தகுதி பெறவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனத்திற்கு லைசென்ஸ் கொடுக்க அனுமதி வேண்டும் என்றால் மேலும் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

