sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 டில்லி மக்களுக்கு பணியாற்றுவேன் புதிய கவர்னர் டி.எஸ்.சாந்து அறிவிப்பு

/

 டில்லி மக்களுக்கு பணியாற்றுவேன் புதிய கவர்னர் டி.எஸ்.சாந்து அறிவிப்பு

 டில்லி மக்களுக்கு பணியாற்றுவேன் புதிய கவர்னர் டி.எஸ்.சாந்து அறிவிப்பு

 டில்லி மக்களுக்கு பணியாற்றுவேன் புதிய கவர்னர் டி.எஸ்.சாந்து அறிவிப்பு


ADDED : மார் 07, 2026 01:39 AM

Google News

ADDED : மார் 07, 2026 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''இந்த நாட்டுக்கும், டில்லி மக்களுக்கும் பணியாற்றுவேன்,'' என, டில்லி மாநில துணை நிலை கவர்னராக நியமிக்கப் பட்டுள்ள டி.எஸ்.சாந்து கூறினார்.

கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, டில்லி மாநில துணை நிலை கவர்னராக பணியாற்றிய வி.கே.சக்சேனாவுக்கு பதிலாக, முன்னாள் துாதரக அதிகாரி தரண்ஜித் சிங் சாந்துவை, டில்லி மாநிலத்திற்கான துணை நிலை கவர்னராக நியமித்து, நேற்று முன்தினம் நள்ளிரவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அ றிவித்திருந்தார்.

நேற்று அந்த பொறுப்பை ஏற்ற சாந்து கூறியதாவது:

டில்லியின் துணை நிலை கவர்னராக பணியாற்ற வேண்டும் என பணித்துள்ள பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி முர்முவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்கிறேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நம்பிக்கைக்குக்கும், ஆதரவுக்கும் நன்றி. என் பதவிகாலத்தில் டில்லி மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் சேவையாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துாதரகத்தில் பல முறை, முக்கிய பொறுப்புகளில், சாந்து நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பிப்ரவரி 2020 முதல், ஜனவரி 2024 வரை அமெரிக்காவுக்கான இந்திய துாதராகவும் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன், 2013 - 2017 வரை மற்றும் 1997 முதல், 2000ம் ஆண்டு வரையிலும், நியூயார்க் நகரில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகத்தில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.

டில் லியில் இருந்த துணை நிலை கவனர் வி.கே.சக்சேனா, லடாக் பகுதியின் துணை நிலை கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us